உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் மார்கழி விழாக்கோலம் அமர்க்களம்! வாசகியரின் திறமையை என்னவென்று சொல்வது

தினமலர் மார்கழி விழாக்கோலம் அமர்க்களம்! வாசகியரின் திறமையை என்னவென்று சொல்வது

கோவை; புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருவதால், மார்கழி கோலப்போட்டியில் பங்கேற்ற 'தினமலர்' வாசகிகள், வண்ண கோலத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளையும், கவிதைகளையும் எழுதி அசத்தி இருந்தனர். கோவையில் 'தினமலர்' மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியர், இந்த கோலப் போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம், பூக்கோலம், ரங்கோலி என, விதவிதமான வண்ணக் கோலங்களை வரைந்து பரிசுகளை வென்று வருகின்றனர். கோவை விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தல் அருகில் உள்ள, மான்செஸ்டர் அபார்ட்மென்டில் நேற்று நடந்த கோலப்போட்டியில், 19 பெண்கள் பங்கேற்றனர். புள்ளி கோலத்தில், 5 பேரும், ரங்கோலியில், 11 பேரும், பூக்கோலத்தில், 3 பேரும் பங்கேற்றனர்.புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருவதால், மார்கழி கோலப்போட்டியில் பங்கேற்ற வாசகிகள், வண்ண கோலத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும், கவிதை வரிகளையும் எழுதி அசத்தி இருந்தனர். ரங்கோலி கோலம் போட்ட சிந்து, கண்ணைக் கவரும் வண்ணப்பொடிகளால் ஒரு அழகிய வீணையை வரைந்து அசத்தியிருந்தார். புள்ளிக்கோலம் போட்ட திவ்யா, அனிதா இருவரும் இணைந்து தேர் கோலம் போட்டு இருந்தனர். கோலத்தின் இடை இடையே அழகிய வண்ணங்களை சேர்த்து, அழகுபடுத்தி இருந்தனர்.பூக்கோலம் போட்டு இருந்த பிரேமலதா சுப்ரமணியம், கோலத்துடன் 'வாசலிலே வண்ணக் கோலம்; வீட்டினில் விழா கோலம்' என, ஒரு கவிதை எழுதி கோலத்தின் அருகில் வைத்து இருந்தார்.பள்ளி மாணவிகள் தன்சிகா, சாஷா இருவரும் அம்மா விநாயகருக்கு விளக்கு ஏற்றும் காட்சியை, ரசிக்கும் படி ஒரு ஓவியம் போல், ரங்கோலியில் வரைந்து இருந்தனர்.டாக்டர் தம்பதியர் வித்யா, மது சாய்ராம் இருவரும் இணைந்து ரங்கோலியில் காலச்சக்கரம் வரைந்து இருந்தனர். நிலைமாறும் உலகில், மாறுபடும் மனிதர் எண்ணங்களை, வண்ணங்களால் வேறுபடுத்தி இருந்தனர். சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாகர்ஷ், ஆதித், சாய்சரண், டாக்டர் வித்யா மது சாய்ராம், முருகமணி, வித்யா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.இந்த மார்கழி விழாக்கோல போட்டியை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.

பரிசு பெற்றவர்கள்

புள்ளிக்கோலம்: சங்கீதா, சுபா, திவ்யா, அனிதாரங்கோலி கோலம்: சிந்து, முரளி அருணாஸ்ரீ, தன்சிகா, சாஷாபூக்கோலம்: பிரேமலதா சுப்ரமணியம், வசந்தி ராமசாமி, சிவான்சி, சகானா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை