அஞ்சல் வழி பட்டயப்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை : கோவை, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-2025ம் ஆண்டு, 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே சேர்வதற்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் மே 1ம் தேதியன்று, குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான, www.tncu.tn.gov.inவாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விபரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள், இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.வரும் 16ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100, இணையதள வழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், வரும் மே 6ம் தேதி பிற்பகல் 5:30 மணி வரை. இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இணைய வழியாக அல்லாமல், நேரடியாகவோ, தபால் வாயிலாகவே மற்றும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கீதா அழைப்பு விடுத்துள்ளார்.