மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல்
13-Sep-2024
நெகமம் : பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நெகமம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பொள்ளாச்சி மற்றும் நெகமம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள், நெகமம் பஸ் ஸ்டாண்ட் சென்று, பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால், சமீபகாலமாக, சில அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் பஸ் ஸ்டாண்டினுள் செல்லாமல் ரோட்டிலேயே பஸ்சை நிறுத்தி, பயணியரை இறக்கி விடுகின்றனர். இதனால், அந்த வழித்தடத்தில் பயணிக்க பஸ் ஸ்டாண்டினுள் காத்திருக்கும் பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.பண்டிகை மற்றும் முக்கிய நாட்கள், அரசு அதிகாரிகள் வரும் போது மட்டும் அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டின் உள் பகுதியில் சென்று வருகின்றன. இதனால், நெகமம் பஸ் ஸ்டாண்ட் செல்வதை தவிர்த்து, ரோட்டிலேயே பயணியர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டினுள் பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறுகையில், 'நெகமம் சுற்றுப்பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால், காய்கறிகள் மற்றும் கால்நடை தீவனம் போன்றவைகளை, பஸ் வாயிலாக எடுத்து செல்கின்றனர். தற்போது, இந்த சுமையை வைத்துக்கொண்டு பஸ் எங்கு நிற்கும் என தெரியாமல் அலைமோதுகின்றனர்.பல்லடம் மற்றும் திருப்பூர் செல்லும் பஸ் கூட முறையாக பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று வருகிறது. ஆனால், உள்ளூர் டவுன் பஸ், பஸ் ஸ்டாண்ட் வருவதில்லை. இதை போக்குவரத்து துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
13-Sep-2024