மழை பாதிப்புகளை தடுக்க பேரிடர் மீட்புக்குழு அலர்ட்
வால்பாறை; வால்பாறைக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' எதிரொலியால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முன்னெச்சரிக்கையாக முகாமிட்டுள்ளனர்.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை பெய்யும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டுள்ளனர்.இதனிடையே, கடந்த இரு நாட்களாக வால்பாறைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்புக்களை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.நேற்று வால்பாறையில் காற்றுடன் கனமழை பெய்த போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளைமீட்பு படையினர் பார்வையிட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கனமழையின் போது ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மக்கள் செல்லக்கூடாது.மழை காலங்களில் முதியவர்கள், குழந்தைகள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மழை பாதிப்புக்களை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, கூறினர்.