உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரிடர் மீட்புக் குழுவினர் மேட்டுப்பாளையத்தில் தயார்

பேரிடர் மீட்புக் குழுவினர் மேட்டுப்பாளையத்தில் தயார்

மேட்டுப்பாளையம்; கனமழை எச்சரிக்கையை அடுத்து, மேட்டுப்பாளையத்தில் 27 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 27 பேர் கொண்ட குழு ரப்பர் படகு, சக்தி வாய்ந்த டார்ச் லைட்டுக்கள், லைப் ஜாக்கெட், விபத்துகளில் உதவும் ஸ்ட்ரெச்சர், 2.5 கிலோ வோல்ட் திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்கள், பெரிய மரங்களை அறுக்கும் கையடக்க ரம்பம் உள்ளிட்ட 43 வகையான மீட்புப்பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.பவானி ஆற்றின் அருகே வினோபாஜி நகர் சமுதாய நலக்கூடத்தில் மீட்பு படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இக்குழுவினர் செய்வார்கள்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை