உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு

 தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை பழங்குடியின மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உண்டு, உறைவிட பள்ளி உள்ளது. இங்கு ஐந்தாவது படிக்கும் பழங்குடியின மாணவியை தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பர பரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து குழந்தைகள் நல கமிட்டி முன்னாள் உறுப்பினர் கருப்பையா கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். சைல்டு ஹெல்ப்லைன் பிரிவினரும் பாலமலையில் உள்ள உண்டு, உறைவிட பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவியை பிரம்பால் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது. இது தவிர, பள்ளி வளாகம் மற்றும் கழிப்பிடங்களை மாணவியரை கொண்டு சுத்தம் செய்ததும் தெரியவந்தது. தொடர்புடைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !