உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வினியோகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வினியோகம்

அன்னுார்: அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு, புத்தாடைகள் வழங்கப்பட்டன.அன்னுார் தெற்கு துவக்கப் பள்ளியில், தீபாவளியை முன்னிட்டு, முன்னாள் மாணவர்கள் சார்பில், மாணவ, மாணவியருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் மாணவர்கள் ரவிசங்கர், ராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தாடைகளை, 118 மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். தலைமையாசிரியை ஜீவலதா, எய்ம் பவுண்டேஷன் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ