உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி ரூ.50 ஆயிரம் வென்ற பி.ஜே.பிரதர்ஸ் அணி

மாவட்ட அளவிலான ஆண்கள் கபடி போட்டி ரூ.50 ஆயிரம் வென்ற பி.ஜே.பிரதர்ஸ் அணி

கோவை : சோமையனுாரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில், பி.ஜே.பிரதர்ஸ் 'ஏ' அணி ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை தட்டியது.தடாகம் அருகே சோமையனுாரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, இரு நாட்கள் நடந்தது.'வீ தி லீடர்ஸ் டிரஸ்ட்' சார்பில் முதல் முறையாக, நடத்தப்பட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டியில்,85 கிலோவுக்கு உட்பட்ட எடை பிரிவில், 64 அணிகள் பங்கேற்றன.பகல், இரவு ஆட்டமாக நடந்த போட்டிகளில், பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, முதல் அரை இறுதி போட்டியில், ஓம் முருகா கணுவாய் அணியும், தெலுங்குபாளையம்ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.இதில், 25-15 என்ற புள்ளி கணக்கில், ஓம் முருகா கணுவாய் அணி வெற்றி பெற்றது.இரண்டாவது அரை இறுதி போட்டியில், பி.ஜே.பிரதர்ஸ் 'ஏ' அணியும், பேரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் 27-11 என்ற புள்ளி கணக்கில், பி.ஜே. பிரதர்ஸ் 'ஏ' அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, இறுதிப்போட்டியில் பி.ஜே. பிரதர்ஸ் அணியும், ஓம் முருகா அணியும் ஆக்ரோஷமாக விளையாடின. இதில், பி.ஜே. பிரதர்ஸ் 'ஏ' அணி, 26-10 என்ற புள்ளி கணக்கில் ஓம் முருகா அணியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பைகளை, 'வீ தி லீடர்ஸ்' அறக்கட்டளையின், கோவை ஒருங்கிணைப்பாளர் பிரவீன் வழங்கினார். பங்கேற்ற, 64 அணி வீரர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ