உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

மேட்டுப்பாளையம்: மாவட்ட அளவில் நடந்த பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில், சிறுமுகை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், முதலிடம் பெற்றனர். 'ஸ்ரீராம் இலக்கிய கழகம்' ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களிடையே திருக்குறளின் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி வருகின்றன. கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவில் நடந்த பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான இடைநிலைப் பிரிவில் நடந்த பேச்சு போட்டியில், சிறுமுகை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் கார்நிஷ் முதலிடம் பெற்றார். கட்டுரைப் போட்டியில், இப்பள்ளி மாணவியர் பாண்டீஸ்வரி முதலிடம், தன்மிதா இரண்டாம் இடம், ஓவியப் போட்டியில், பிரதிக்ஷா முதலிடம் பெற்றனர். பேச்சு போட்டியில், இப்பள்ளியை சேர்ந்த கனிஷ்கர், முகமது ஷாகித், சாக்ஷி ஆகியோரும், கட்டுரைப் போட்டியில் ஹனிகா, ஓவியப் போட்டியில் ஹிரிதிஷா ஆகியோர் ஊக்கப்பரிசு பெற்றனர். சென்னையில் அக்., 2ம் தேதி மாநில அளவில் நடக்கும் போட்டிகள், கார்நிஷ் தேர்வு பெற்று உள்ளார். மாணவர்களையும், பயிற்சி அளித்த கணித ஆசிரியர் திருமுருகனையும், பள்ளி தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !