மாவட்ட மூத்த ஆண்கள் அணி தேர்வு; கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு
கோவை ; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட மூத்த ஆண்கள் அணி தேர்வு வரும், 14ம் தேதி நடக்கிறது.'எஸ்.எஸ்., ராஜன் டிராபி' கிரிக்கெட் போட்டி மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்படுகிறது. இதற்கென, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோவைக்கு மூத்த ஆண்கள் அணி தேர்வு வரும், 14ம் தேதி காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. ஆவாரம்பாளையம், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் தேர்வில், கடந்த, 1984ம் ஆண்டு செப்., 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்தவர்களும், கடந்த, 2011ம் ஆண்டு ஆக., 31ம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு பங்கேற்கலாம்.மேலும், https://forms.gle/8AY2KAjhb1k9GxZ79 என்ற 'லிங்க்' வாயிலாக பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 80729 48889, 94420 02622 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சங்கத்தின் செயலாளர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.