உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட சிலம்ப போட்டி; ஏ.எம்.எஸ். மாணவி வெற்றி

மாவட்ட சிலம்ப போட்டி; ஏ.எம்.எஸ். மாணவி வெற்றி

பொள்ளாச்சி; கோவை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், பொள்ளாச்சி ஏ.எம்.எஸ். பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கோவை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி, ஹிந்துஸ்தான் கல்லுாரியில் நடந்தது. அதில், 19வயதுக்கு உட்பட்ட பிரிவில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா, வெற்றி பெற்று முதலிடம் பெற்றார். மேலும், மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை