மேலும் செய்திகள்
மாவட்ட கேரம் போட்டிகள்; வெற்றியாளர்கள் அறிவிப்பு
02-Dec-2024
ஆனைமலை; தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கோவை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், கே.பி.ஆர்., கல்லுாரியில் நடைபெற்றன.அதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் இறுதி போட்டியில், கோவை அகர்வால் மெட்ரிக் பள்ளியை, 2 - 1 என்ற செட் கணக்கில் என்.ஜி.என்.ஜி., பள்ளி அணி வென்றது.19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது. இதில், சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசினை, ஜோதிமணிகண்டன், விஜிஸ் பெற்றனர்.19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டியில், என்.ஜி.என்.ஜி., பள்ளி இரண்டாமிடம் பெற்றது.மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இவ்வணிகள், தமிழக அரசு நடத்தும் மாநில அளவிலான போட்டிகளில், கோவை மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளன.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ரங்கசாமி, தலைமையாசிரியர் கிட்டுச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
02-Dec-2024