உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போக்குவரத்து நெருக்கடி: தவிர்க்க டிவைடரை அகற்ற வேண்டும்

 போக்குவரத்து நெருக்கடி: தவிர்க்க டிவைடரை அகற்ற வேண்டும்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 2வது கேட் அருகே அம்மா உணவகம் செயல்படுகிறது. அதன் முன் பஸ் ஸ்டாப் மற்றம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 'யூ டேர்ன்' முறையில் வாகனங்கள் திரும்பிச் செல்ல சிரமப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு பரிந்துரைப்படி, மருத்துவமனை முதல் கேட் அருகே பஸ் ஸ்டாப் மாற்றப்பட்டது. அம்மா உணவகம் முன் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. இதை மீறி அப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசாரால் டிவைடர் வைத்து தடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால், திருச்சி ரோடு அகலம் 6 அடி வரை சுருங்கியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கவே வாகனம் நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்தில் டிவைடரால் மறைப்பு ஏற்படுத்தியிருப்பது வாகனங்கள் செல்வதை தடுக்கிறது. டிவைடரை அப்புறப்படுத்தி, திருச்சி ரோட்டை முழுமையாக வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ