உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி கடைசி கட்ட ஷாப்பிங் கடைவீதிகளில் திரண்ட மக்கள்

தீபாவளி கடைசி கட்ட ஷாப்பிங் கடைவீதிகளில் திரண்ட மக்கள்

கோவை; கோவையில் உள்ள துணிக்கடைகளில், கடைசி கட்ட தீபாவளி ஷாப்பிங் களைகட்டியது. பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்துக்கு ஏதுவாக, பல்வேறு துணிக்கடைகளில், சிறப்பு தள்ளுபடிகள், சிறப்பு பரிசுகள் என அறிவிக்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக, கோவை காந்திபுரம், ஒப்பணக்காரவீதி, ஆர்.எஸ்.புரம் உட்பட பல இடங்களில் உள்ள துணிக்கடைகளில், ஆடை ரகங்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர். இன்று, தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், நேற்றும் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. பெரிய கடைகளில் வழக்கம் போல் கூட்டம் இருந்தது. தீபாவளி உட்பட பண்டிகை சமயங்களில், ஆங்காங்கே சாலையோரங்களில் நடத்தப்படும் கடைகளிலும் கூட்டம் இருந்தது.'ஆன்-லைன்' வாயிலாக பலர் பட்டாசுகளை வாங்கினாலும், உரிமம் பெற்று அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ