உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

மருதம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோ வை, வ.உ.சி. பார்க், நேரு ஸ்டேடியத்தில் உள்ள மருதம் கோ-- ஆப்டெக்ஸ் ேஷாரூமில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது. இதன் மேலாளர் செல்வதுரை கூறியதாவது: இங்க, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கடன் விற்பனை நடக்கிறது. பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய கிழிந்த நிலையில் உள்ள ஒரிஜினல் ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை கொடுத்து விட்டு புதிய பட்டுப்புடவைகளை பெற்று கொள்ளலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த பர்னிசிங் ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 96772 24900.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை