உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் தி.மு.க., வேட்பாளர் வெற்றி

 தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் தி.மு.க., வேட்பாளர் வெற்றி

வால்பாறை: வால்பாறையில் தேயிலை எஸ்டேட்களில் தொழிலாளர்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யும் வகையில் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடத்தப்படுகிறது. நிரந்தரமாக பணிபுரியும் தொழிலாளர்கள், பிரதிநிதி தேர்தலில் ஓட்டு போடுகின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி எஸ்டேட் முதல் பிரிவு எஸ்டேட்டில் பெண் தொ ழிலாளர்களுக்கான பிரதிநிதி தேர்தல் நடந்தது. இதில், விஜயலட்சுமி (தி.மு.க.,), ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,), கலா (வி.சி.,) ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி. மு.க., வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி பெற்றார். வால்பாறை நகரில் உள்ள எல்.பி.எப்., தொழிற்சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் சவுந்திரபாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ