உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

தி.மு.க., கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலரின் உள்ளிருப்பு போராட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் விமலா ராஜேஷ். இவர் தன்னுடைய வார்டில் மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினார். இது குறித்து, கவுன்சிலர் விமலா ராஜேஷ் கூறுகையில், பன்னிரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிற வார்டுகளிலும் இதே நிலை நீடிக்கிறது. ஆனால், இதே பேரூராட்சிக்கு உட்பட்ட பூச்சியூர் வட்டாரத்தில் உள்ள,1,9, 10, 11வார்டுகளில் பில்லூர் குடிநீர் மூன்று தினங்களுக்கு ஒரு முறை தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மற்றும் செயல் அலுவலரிடம் பலமுறை எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளேன் என்றார்.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவராக இருக்கும் மரகதம் வீரபத்திரன் தி.மு.க.,வை சேர்ந்தவர். அதே கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை