மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
வால்பாறை; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறி, வால்பாறையில் நகராட்சி அலுவலகத்தின் முன் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். ஆதிதிராவிட நலக்குழு மாநில இணை செயலாளர் ஆறுச்சாமி, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.* கிணத்துக்கடவு தி.மு.க., சார்பில், பழைய பஸ் ஸ்டாப் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். நெகமம் பகுதியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.