கோவில் வளாகத்தில் மின்விளக்கு எறியல!
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு கனககிரி வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில், மின் விளக்குகள் எரியாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, கனககிரி பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் விஷேச நாட்களில் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு, மலைப்பாதை வழியில் மின் விளக்குகள் உள்ளது.கடந்த சில நாட்களாக இந்த மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்கு செல்ல தடுமாற்றம் அடைகின்றனர்.குறிப்பாக, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் விபத்து அபாயத்துடன் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்கள் இரவு நேரத்தில் மலைப்பாதையில் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கின்றனர்.பக்தர்கள் நலன் கருதி மின் வாரியத்தினர், மின் விளக்குகளை சரி செய்தோ அல்லது புதிய மின் மின்விளக்குகள் பொருத்தவோ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.