உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவை கடித்த பழங்கள் வேண்டாம்: கலெக்டர்

பறவை கடித்த பழங்கள் வேண்டாம்: கலெக்டர்

கோவை, : நிபா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று, கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கலெக்டர் அறிக்கை: நிபா வைரஸ் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு தொற்று. நோய்வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால், பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து பிறருக்கு பரவுகிறது. கிருமி தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் இந்நோய் அறிகுறி தெரியும். தென்பட்ட, 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் மயக்கம் ஏற்படும். காய்கறி மற்றும் பழங்களை, நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. வீட்டின் சுற்றுப்புறத்தைத் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.பன்றிகளை குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அல்லது அரசு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை