மேலும் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல் 10,592 பேருக்கு அபராதம்
02-Jul-2026
காந்திபுரம்: உயிர் அமைப்பு மற்றும் கல்லுாரிகளில் செயல்படும் உயிர் கிளப் தன்னார்வலர்கள் இணைந்து, வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு வேண்டாம்' என்பதை வலியுறுத்தி நேற்று காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காலை, 10 முதல் 12 மணி வரை சிக்னலில் நின்ற வாகன ஓட்டிகளிடம் வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம், ஹெல்மெட் அணிவதன் அவசியம், அதிவேகம் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றி வாகன ஓட்டிகளை பாராட்டி இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில், பல்வேறு கல்லுாரி மாணவ தன்னார்வலர்கள், உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் பாலசுந்தரம், போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
02-Jul-2026