உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் பிரச்னைக்கு கலந்தாய்வு

குடிநீர் பிரச்னைக்கு கலந்தாய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டிக்கு உட்பட்ட அப்துல்கலாம் நகர், அருட்செல்வபுரம், பட்டத்தரசி நகர், சக்தி நகர், யூனியன் நகர், பவளம் நகர், பிளாட்டினம் நகர், சரவணா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த, 12 ஆண்டுகளாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள், போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். போலீசார் அறிவுறுத்தலின்படி, போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், போலீசார், குடிநீர் வடிகால் வாரியம், ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், இரண்டு மாதத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் அருண்பிரசாத் கூறுகையில், ‘‘குடிநீர் பிரச்னை குறித்து கூடுதல் கலெக்டரிடம் முறையிடப்பட்டது. தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !