உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரக்கு வாகனங்களால் ரோட்டில் நெரிசல் திணறும் வாகன ஓட்டுநர்கள்

சரக்கு வாகனங்களால் ரோட்டில் நெரிசல் திணறும் வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.ஆழியாறு, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இவ்வழியாக செல்கின்றன.இதனால், இந்த ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில், வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இதனால், சரக்கு வாகனங்கள் அதிகமாக வருகின்றன. போக்குவரத்து நிறைந்த நேரத்தில் சரக்கு வாகனங்கள், ரோட்டிலேயே நிறுத்தி சரக்குகளை இறக்குவதால், மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.சரக்கு வாகனங்கள் சென்ற பின்னரே, மற்ற வாகனங்கள் செல்ல வேண்டியதுள்ளதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவசரமாக செல்ல வேண்டுமென்றாலும், செல்ல முடியாத நிலையே உள்ளது.ஒரு சில நேரங்களில் விரக்தியடையும் வாகன ஓட்டுநர்கள், மாற்று வழியில் செல்கின்றனர். இதனால், வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே, சரக்கு வாகனங்கள் வந்து செல்லும் நேரத்தை வரையறுக்க வேண்டும்.நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படாமல் ஓரமாக நிறுத்தவும் போலீசார் அறிவுறுத்த வேண்டும். இந்த ரோட்டில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை