உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் டிரோன் பயிலரங்கு

வேளாண் பல்கலையில் டிரோன் பயிலரங்கு

கோவை; கோவை வேளாண் பல்கலை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பி.டெக்., வேளாண் பொறியியல் மாணவர்களுக்கு, 'ஏரோ மாடலிங் மற்றும் டிரோன் தொழில்நுட்பம்' குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடந்தது.கல்லூரி டீன் ரவிராஜ், பயிலரங்கைத் துவக்கி வைத்து, 'டிரோன் தொழில்நுட்பம் நவீன விவசாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு காரணியாக அமைவதுடன், துல்லிய வேளாண்மை, பயிர் கண்காணிப்பு, தெளித்தல் மற்றும் பிற வேளாண் நடவடிக்கைகளில் டிரோன்களின் பயன்பாடு குறித்து' விளக்கினார்.மேலும், இத்துறையில் ரிமோட் பைலட் உரிமம் பெறுவது முதல், புதிய தொழில் துவங்குவது பற்றியும் எடுத்துரைத்தார்.கோவை, ஆர்.சி. ஹாபி இந்தியா நிறுவனத்தின் முதுநிலை ஏரோமாடலிங் பயிற்றுவிப்பாளர் ராஜ்குமார், பயிற்சி அளித்தார்.டிரோன் பாகங்களை இணைத்தல், பல்வேறு துணை அமைப்புகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது, டிரோன்களை சரி செய்வது, ஆளில்லா விமானங்களை இயக்குவதன் வாயிலாக கள நிலைமைகளை புரிந்துகொள்ளுதல், விமான சட்டங்களுக்கு உட்பட்டு டிரோன்களை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை