உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப் பொருள் ஒழிப்பு போலீசார் விழிப்புணர்வு

போதைப் பொருள் ஒழிப்பு போலீசார் விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்; போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து கிராமங்கள் தோறும், சிறுமுகை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போதைப் பொருள் விற்பனை தடுப்பு மற்றும் பயன்பாட்டை ஒழிக்க மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட லிங்காபுரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, எஸ்.ஐ., சுரேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இளைஞர்கள், பொது மக்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, போதைப் பொருட்கள் பயன்பாட்டால் குடும்பங்கள் சீரழிகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலம் கெடுகிறது, என அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை