உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

போதைப்பொருள் கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

கோவை;சிங்காநல்லுார் கருப்பையன் கோவில் அருகே, போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது, முறையாக பதிலளிக்கவில்லை. அவரை சோதனை செய்தபோது, உயர் ரக போதைப்பொருளான எம்.டி.எம்.ஏ., (மெத்தலின் டயாக்சி மெத்தபீட்டமைன்) இருந்தது. அவர், நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த யாசர் அராபத், 23. பெங்களூருவில் இருந்து 14.25 கிராம் படிக வடிவிலான எம்.டி.எம்.ஏ., மற்றும், 3.3 கிராம் மாத்திரை வடிவிலான எம்.டி.எம்.ஏ., என, 17.55 கிராம் வாங்கி வந்திருக்கிறார். யாசர் அராபத்தை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ., பைக், மொபைல்போன் ஆகியவற்றை கைபற்றினர். சமீபத்தில் குஷ் கஞ்சா, மெத்தாபீட்டமைன் ஆகியவற்றை கடத்தி கைது செய்யப்பட்ட அமர்நாத் என்பவருக்கும், யாசர் அராபத்துக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ