சுயஉதவி குழுக்களுக்கு இணைய வர்த்தக பயிற்சி
கோவை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கான இணைய வர்த்தகம் தொடர்பான பயிற்சி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பயிற்சி வழங்கினர். 'டிரைபெட்' நடைமுறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் நன்மைகள், டிஆர்பி பண்ணை சார்ந்த தயாரிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 30 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றதாக, மகளிர் திட்ட அலுவலர் மதுரா கூறினார்.