வீடு கட்ட இடம் வழங்கணும்; இ.கம்யூ., கட்சி கோரிக்கை
வால்பாறை : எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தலா, இரண்டு சென்ட் வீதம் இடம் வழங்க வேண்டும் என்று இ.கம்யூ.,கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இ.கம்யூ.,கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் மோகன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வனவிலங்குகளுக்கு இடையே உயிரை பணயம் வைத்து பணிபுரியும் தொழிலாளர்கள், பணி ஓய்வுக்கு பின் வசிக்க கூட வீடு இல்லாமல் பரிதவிக்கின்றனர்.பல்வேறு காரணங்களால், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, வால்பாறை நகரில் தனியார் எஸ்டேட் வசம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து, பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்ட வசதியாகதலா, இரண்டு சென்ட் இடம் வழங்க வேண்டும்.ேலும் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க, வால்பாறையில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.