உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை

மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை

கோவை ;கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கினார்.சிறந்த வழிகாட்டுதலையும், ஆலோசனையையும் மாணவர்களும், பெற்றோர்களும் பெற்று பயனடைந்தனர். நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற மாணவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் வேலுசாமி, செயலர் வனிதா, முதல்வர் சக்திவேல் மற்றும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை