உள்ளூர் செய்திகள்

 கத்தரி விலை உயர்வு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வரத்து குறைவு காரணமாக, கத்தரி விலை உயர்ந்துள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த, 10 நாட்களுக்கு முன் ஒரு கிலோ கத்தரி, 80 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவு காரணமாக, பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ கத்தரி, 120 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து வரத்து குறைந்து வருவதால், கத்தரி மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி