உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாசிக்கவே சிரமப்பட்ட முதியோர்

சுவாசிக்கவே சிரமப்பட்ட முதியோர்

கோவை நகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், புகை மூட்டம் ஏற்பட்டு, கோவையில் காற்று மாசுபாடு குறியீடு, 325 ஆக உயர்ந்தது. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே, அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது. ஆனால் வெடித்த பட்டாசுகளிலிருந்து வெளியேறிய, காட்மியம், பேரியம், மெக்னீஷியம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்த வாயு, வெளியேறி நகர் முழுவதும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியது. முதியோர், சுவாச பாதிப்பு உள்ளோர், இதனால் அவதிப்பட்டனர். தீபாவளியன்று, காலை 10 மணிக்கு, குறைந்தபட்சமாக காற்று மாசுபாடு குறியீடு ( ஏ.க்யூ.ஐ.,-- Air Quality Index) 68 ஆக இருந்தது. இரவு 11.05 மணிக்கு, இது 325 ஆக உயர்ந்தது. அதே அளவு நேற்றும் தொடர்ந்தது. இது அதிகபட்ச அளவீடாகும். தலைநகர் டில்லியில், நேற்று முன் தினம் காற்று மாசு குறியீடு 400ஐ தாண்டியதால், பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமத்துக்குள்ளாயினர். கோவை வடக்கு மற்றும் தெற்குசுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோவை நகரில் காற்று மாசின் அளவு தீபாவளி பண்டிகையின் போது உயரும்; அதன் பின் குறையும்.கோவையில் ஒவ்வொருஇடத்துக்கு தகுந்தாற்போல்ஒலி மாசு அளவுவேறுபடும். ஒலி மாசு, கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, 127 டெசிபலும், மேட்டுப்பாளையம் சாலையில், 145ம் இருந்தது. பீளமேடு பகுதியில், 147ஆக இருந்தது. தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இப்படி ஏற்படும்; மற்ற நாட்களில் இவ்வளவு ஒலி மாசு இருக்காது. மனிதனின் கேட்கும் திறன், 70 டெசிபலுக்குள் இருக்க வேண்டும். அதற்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து ஒலிமாசு ஏற்படக்கூடாது. இவ்வாறு, அவர்கள்தெரிவித்தனர்.

எகிறியது

ஒலி மாசு அளவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ