உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின்வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 மின்வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி, டாடாபாத் தலைமை பொறியாளர்அலுவலகத்தில் அனைத்து நிலை மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டு வழங்க வேண்டிய, ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. அறிக்கையில், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் முரண்பாடு உள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு தொழிலாளர்கள் சம்மேளன மாநில இணை செயலாளர் கந்தவேல் கூறுகையில், ''புதிய ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை ரத்து செய்து, முரண்பாடு இன்றி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார். ஆர்ப்பாட்டத்தில்,பொறியாளர்கள் சங்க தலைவர் சென்ராம், மின்வாரிய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி வீராச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ