மேலும் செய்திகள்
ஏப்.5 மின்நுகர்வோர் சிறப்பு முகாம்
03-Apr-2025
சோமனுார்; சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.தமிழ்நாடு மின் பகிர்மான கழக சோமனூர் கோட்ட செயற்பொறியாளர் சபரிராஜன் அறிக்கை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சோமனுார் கோட்டம் சார்பில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11: 00 மணிக்கு துவங்கி மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. சோமனுார் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று, மீட்டர் பழுது, பில்லிங் தொடர்பான புகார்கள், குறைந்த மின் அழுத்தம் மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுவது தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
03-Apr-2025