பள்ளிகளில் தற்காப்பு கலைக்கு முக்கியத்துவம்: பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்கும் வழிவகுக்கும்
கோவை: எஸ்.ஜி.எப்.ஐ., கராத்தே தேர்வு போட்டியில், 3,000க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டிய நிலையில், பள்ளிகளில் தற்காப்பு கலையை ஊக்குவிப்பதுடன்,இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் 'கட்டா' முறையையும் சேர்க்க, கோரிக்கை வலுத்துள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாநில அளவில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு டெக்ஸ்வேலியில் கராத்தே போட்டிக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி, சமீபத்தில் நடந்தது. இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட, 702 மாணவியர், 2,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவில் பங்கேற்றனர். போட்டியானது'குமிட்டே' பிரிவில் ஒரு நிமிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் குவிந்ததால்போட்டி இரவு வரை நீடித்தது. கராத்தே பயிற்சியாளர்கள் கூறியதாவது: 'கட்டா' எனும் செயல்முறை போட்டி, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுவதில்லை. பல்கலை அளவில்கட்டா, குமிட்டே இரண்டும் இடம்பெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 'கட்டா' முறையில் போட்டி நடத்தப்படுவதுஇல்லை.இதனால்,கல்லுாரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்கை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. பள்ளிகளிலும் 'கட்டா' முறையை ஊக்குவிக்க வேண்டும். எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய தேர்வு போட்டிகளுக்கு முன், மண்டல அளவில் தேர்வு செய்து, மாநில அளவிலானபோட்டிக்கு அனுப்பலாம்.திறமை வாய்ந்த மாணவர்கள் இல்லாத பள்ளிகள் பெயரளவுக்கு மாநில போட்டிக்கு அனுப்பிவைக்கின்றனர். திறமையான மா ணவர்களை ஊக்குவிப்பது அவசியம்; அதேசமயம் போட்டிகளில் இருக்கும் குளறுபடிகளுக்கு தீர்வு ஏற்படுத்தினால், அலைச்சல் பிரச்னை இருக்காது. இவ்வாறு, அவர்கள் கூறினர். இன்று பள்ளி மாணவியர், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை மாணவ, மாணவியர் கற்றுக்கொண்டால் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பது ஆசிரியர், பெற்றோரின்எதிர்பார்ப்பு.
அரசின் கவனத்துக்கு
பள்ளிகளில் கராத்தேவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் இப்போட்டியை ஊக்குவிக்கவும், தற்காப்பு கலையை கற்கும் விதத்திலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்கின்றனர், பள்ளிக்கல்வி அதிகாரிகள்.