உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி விற்ற பணியாளர் சஸ்பெண்ட் 

ரேஷன் அரிசி விற்ற பணியாளர் சஸ்பெண்ட் 

கோவை; கணபதி, ஆவாரம்பாளையத்தில் செயல்படும் ரேஷன்கடையில் பொதுவினியோகத்துக்கு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை, தனிநபருக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது. ரேஷன்கடை பணியாளர் சாந்தாமணியிடம் இருந்து, அன்றாடம் 75 கிலோ எடை கொண்ட நான்கு மூட்டை ரேஷன் அரிசியை, ஒவ்வொரு மூட்டையாக மொபெட்டில் இடைத்தரகர்கள் எடுத்து செல்வதாகவும், ஒரு கிலோ அரிசியை ரூ. 7.50க்கு வாங்கி அதை ரூ.15க்கு மாவு தயாரிப்போருக்கு விற்பனை செய்வதாக, ஆட்டோ டிரைவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ரேஷன்கடை பணியாளர் சாந்தாமணியை, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அழகிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து ஆய்வு நடக்கிறது. ஆய்வு அடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வழங்கல் துறையினர் கூறினர். இதே போல், ரேஸ்கோர்ஸ் கலெக்டர் பங்களா பின்பகுதியிலுள்ள ரேஷன்கடையிலும், பகிரங்கமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரேஷன்கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !