உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது

சுற்றுலா துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது

மேட்டுப்பாளையம்,:சுற்றுலா துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது என சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கில், ஐ.ஐ.டி.டி.எம்.,உதவி பேராசிரியர் தெரிவித்தார்.மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும், அரசு கலை, அறிவியல் கல்லுாரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பாக, 'சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புகள்' பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய சுற்றுலா துறையின் கீழ் ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் உள்ள ஐ.ஐ.டி.டி.எம்.,மில் பணிபுரியும் உதவி பேராசிரியர் அபிலாஷ் மற்றும் அலுவலர் சரத் சந்திரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், ''மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இத்துறை சார்ந்து தற்போது பல்வேறு படிப்புகள் வந்துள்ளன. இத்துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. ஏர்போர்ட், ரயில்வே, டிராவல் ஏஜென்சிஸ் என பல இடங்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளன,'' என்றனர்.இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்ரீ கானப்பிரியா, உதவி பேராசிரியர்கள் உமா மகேஸ்வரி, நிஷாந்தி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி