உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

 இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

கோவை: அரக்கோணம் அருகே இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன. இதனால், இன்று, நாளை, 27, 28ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 6:20க்கு சென்னை சென்ட்ரல் புறப்படும் எக்ஸ்பிரஸ்(12680) ரயில் காட்பாடி வரையே இயக்கப்படுகிறது; சென்னை சென்ட்ரல் செல்லாது. அதேபோல், சென்னை செட்ரலில் இருந்து மதியம் 2:30க்கு கோவை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்(12679) காட்பாடியில் இருந்து மாலை 4:15க்கு புறப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:15க்கு மங்களூரு புறப்பட வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்(22637) 2:40க்கு புறப்படுகிறது. வரும் 27, 28ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:15க்கு கோவை புறப்பட வேண்டிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(20643) 3:00 மணிக்கு புறப்படுகிறது. வரும் 28ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3:10க்கு திருவனந்தபுரம் புறப்பட வேண்டிய வாராந்திர எக்ஸ்பிரஸ்(12697) மாலை 4:40க்கு புறப்படுகிறது. வரும் 28ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3:20க்கு திருவனந்தபுரம் புறப்பட வேண்டிய தினசரி எக்ஸ்பிரஸ்(12695) மாலை 4:50க்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை