மேலும் செய்திகள்
ஏரியில் காய்ந்த கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
27-May-2026
அன்னூர்: தமிழக அரசின் நீர்வளத் துறையில், புதிதாக இளம் இன்ஜினியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அரசு சார்பில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக, எல்லப்பாளையத்தில், 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம்குளத்தில் ஆய்வு செய்தனர். தன்னார்வலர்கள், அவர்களிடம் குளத்தின் ஏரி அமைப்பு, நடப்பட்ட மரங்கள், பராமரிக்கும் முறை, குளத்திற்கு நீர் வரும் பாதை, அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளத்திற்கு தண்ணீர் வரத்து, இந்த குளத்தால் சுற்றுவட்டாரத்தில் பயன்பெறும் விவசாய நிலப்பரப்பு என அனைத்தையும் விளக்கினர். தமிழக அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட இளம் இன்ஜினியர்களுடன், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பினரும், ஆவாரம் குளம் பாதுகாப்பு அமைப்பினரும் பங்கேற்றனர்.
27-May-2026