உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எண்ணம் நர்சிங் கல்லுாரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

 எண்ணம் நர்சிங் கல்லுாரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

கோவை: கிணத்துக்கடவு, எண்ணம் செவிலியர் மற்றும் பார்மஸி கல்லுாரியில், கலையரங்கம் திறப்பு விழா, மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் விழா மற்றும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. நைட்டிங்கேல் கல்விக்குழுமத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன், கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அருட்தந்தை விக்டர் பிரேம்குமார், மலையாள இயக்குனர் பிரதீப் ஜோஸ் மற்றும் மலையாள பிக்பாஸ் புகழ் கலாபவன் சரிகா ஆகியோரும் கலந்துகொண்டனர். அனைவரும் கேக் வெட்டி, சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கல்லுாரி நிர்வாக இயக்குனர்கள் நடராஜன், பிரேமலதா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜீவ், சஞ்சய்மணி, சந்தியா, மீனா மற்றும் கல்லுாரி முதல்வர்கள் டாக்டர்கள் பொன்னம்மாள், இந்துலதா, சோபியா, மும்தாஜ், அன்னம், ராஜன் நேதாஜி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ