மேலும் செய்திகள்
ரூ.16.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்
01-Mar-2026
கோவை: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள சூழலில், போலீசார், துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றாலோ, பொருட்களாக இருந்தாலோ பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அதன்படி, நேற்று காலை லங்கா கார்னர் பகுதியில் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 எவர்சில்வர் தட்டுக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்கள் கருவூலத்துறையில் ஒப்படைக்கப்பட்டன. உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி, உரிமையாளரை போலீசார் அனுப்பிவைத்தனர்.
01-Mar-2026