உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம்

திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் கயல்விழி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சக்ரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது; தேர்தல் பணிக்கு தயார்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ