உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு சங்கத்துக்கு மானியம் விடுவிப்பு முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு

கூட்டுறவு சங்கத்துக்கு மானியம் விடுவிப்பு முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு

- நமது நிருபர் -தமிழகம் முழுவதும் ரேஷன் கடை செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, 300 கோடி ரூபாய் மானிய தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. நிலுவையின்றி முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் ரேஷன் கடை நடத்துவதால், கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் செலவினங்கள் துறை மானியம் வழங்கும்.அவ்வகையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 2024-25ம் ஆண்டுக்கான மானிய தொகையை விடுவித்துள்ளார். அவ்வகையில், 39 மாவட்டத்துக்கு, 442 கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இதில் மூன்றில் இரு பங்கு என்ற வகையில் மொத்தம், 300 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இத்தொகை உரிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, மாநில கூட்டுறவு வங்கி வாயிலாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.நலிவடைந்த சங்கங்கள், கலைக்கப்பட்ட சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்காமல் தடுமாறும் சங்கங்கள், இதன் வாயிலாக சற்று நிம்மதி அடைந்துள்ளன.இணை பதிவாளர்கள் இந்த மானிய தொகை வழங்குவதை, ஒரே நடவடிக்கையில் தாமதம் இன்றி வழங்கி, அதை முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு மட்டுமே இதனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கி செயலாளர்கள் சிலர் கூறுகையில், 'ரேஷன் கடைகளை செயல்படுத்த மானியத் தொகை முழுமையாக ஒதுக்கப்படவில்லை. முழுமையாக வழங்க வேண்டும். அப்போது தான், நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ