உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு மொழி எப்போது அழியும் நுால் அறிமுக விழாவில் விளக்கம்

ஒரு மொழி எப்போது அழியும் நுால் அறிமுக விழாவில் விளக்கம்

கோவை; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில்,நுால்கள் அறிமுக விழா, தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது. புலவர் பானுமதி தலைமை வகித்தார். கவிஞர் முத்தையா மோகன் எழுதிய, 'நதிகளைத் தேடும் மழை' கவிதை நுால், எழுத்தாளர் மன்ற மணவாளன் எழுதிய, 'பின் வரிசையில் அமர்ந்து இருப்பவர்கள்' என்ற கட்டுரை நுால் அறிமுகம் செய்யப்பட்டது. நுால் குறித்து, பேராசிரியர் மணிமேகலை பேசியதாவது: எழுத்தாளர் மன்றவாணன், தமிழ்மொழி மீது உள்ள பற்று காரணமாக இந்த நுாலை எழுதி இருக்கிறார்.மக்கள் பேசும் மொழி கல்வி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இல்லாமல் போனால், அந்த மொழி அழிந்து போகும். நாம் பேசும் மொழி, எழுதும் தமிழ்மொழி, பிழையில்லாமல் இருக்க வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் புத்தகங்கள் எழுதும் முன், நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் புதிய கருத்துக்கள் படைப்புகளில் வெளிப்படும் என்பதை, இந்த நுால் வலியுறுத்துகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கவிஞர்கள் செங்குட்டுவன், கரீம், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், இளங்கோவன் மற்றும் ரங்காநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை