உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் பரிசோதனை ஆலோசனை முகாம்

கண் பரிசோதனை ஆலோசனை முகாம்

சூலுார் : அரசூரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், ஏராளமானோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை, அரசூர் ஊராட்சி மன்றம், கோவை மாசானிக் லாட்ஜ் சமூக சேவை அமைப்பு, கன்னிகா அறக்கட்டளை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது.கிட்டப்பார்வை, துாரப்பார்வை, விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் மற்றும் கண்ணாடி வழங்கப்பட்டது. இதேபோல், எல்.ஜி., மருத்துவமனை, துளசியம்மாள் அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.குழந்தைகள், மகளிர் நலம் மற்றும் எலும்பியல் மருத்துவர்கள் குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களிடம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு உள்ளிட்ட குறைபாடுகளை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ