மேலும் செய்திகள்
சத்ய சாயி சேவை
04-Nov-2024
வால்பாறை; வால்பாறையில் நாளை (10ம் தேதி) இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கிறது.கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், டாடா காபி நிறுவனம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வால்பாறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறது.வால்பாறை அடுத்துள்ள செலாளிப்பாறை கிளப்பில், நாளை (10ம் தேதி) காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கிறது.முகாமில், கண்புரை, மாறுகண், நீரழுத்தநோய், மாலைக்கண்நோய், துாரப்பார்வை, கிட்டபார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்தும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். முகாமிற்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், என, முகாம் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
04-Nov-2024