உள்ளூர் செய்திகள்

கண் சிகிச்சை முகாம்

அன்னுார்; மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமில் பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், கண்ணில் நீர் படுதல், கண்புரை உள்ளிட்டவைகளுக்காக, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவைக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !