உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்சாலைகளை மூடும் நிலை உருவாகும்; மின் கட்டண உயர்வால் தொழில்துறை கவலை

தொழிற்சாலைகளை மூடும் நிலை உருவாகும்; மின் கட்டண உயர்வால் தொழில்துறை கவலை

கோவை; தொழிற்துறைக்கான மின் கட்டண உயர்வால், தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும் என, ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன் (ஓஸ்மா) கவலை தெரிவித்துள்ளது.அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்துறையினரும், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என, ஊடகங்கள் வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். எனினும் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது தொழில்துறையை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jijltb39&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே தமிழக ஜவுளித் துறையில் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி செலவு அதிகம். அதிக மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், மூலப்பொருள் விலை, லாரி வாடகை போன்றவை மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாததே, இதற்குக் காரணம்.கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓப்பன் எண்ட் மில்களும், ஸ்பின்னிங் மில்களும் தொழிலை விட்டு வெளியேறி விட்டன. தற்போதைய மின்கட்டண உயர்வு, மேலும் பல தொழிற்சாலைகளை மூடும் நிலைக்குத் தள்ளி விடும்; வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு வழி வகுக்கும். எனவே, முதல்வர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும்.சிவக்குமார், தலைவர், காட்மா: 50 கிலோவாட்டுக்குள் மின் இணைப்பு பெற்றுள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசே செலுத்திக் கொள்வதாக அறிவித்திருப்பதால், முன்பிருந்த அதே கட்டணம் தொடரும் என்பதை வரவேற்கிறோம்.அதே நேரத்தில், 50 கிலோவாட்டுக்கு அதிகமாக மின் இணைப்பு பெற்றுள்ள ஒரு கட்டடத்தில், குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி பல குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வரும் சூழல் இருப்பதால், ஒரே மின் இணைப்பில் தங்கள் குறுந்தொழில் கூடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்படக்கூடும்.மேலும், 50 கிலோவாட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் சிறு மற்றும் பெரு நிறுவனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அவர்களிடம் இருந்து ஜாப் ஒர்க் அடிப்படையில் வேலை எடுத்து செய்யும், குறு மற்றும் குடிசைத் தொழில் முனைவோர்களையும் பாதிக்கும்.எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, மின் கட்டண உயர்வை ரத்து செய்து, தொழில்முனைவோரை பாதுகாக்க வேண்டும்.

குறைக்க வேண்டும்'

''50 கிலோவாட் வரை மின் இணைப்பு பெற்றுள்ள குறுந்தொழில் கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது திருப்தி அளிக்கவில்லை. இதனால், பெரிய பலன் ஏதுமில்லை. ஏனெனில், கோவை போன்ற தொழில் நகரங்களில் 112 கிலோவாட் மின் இணைப்பு ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட குறுந்தொழில்கூடங்கள் சேர்ந்து இயங்குவர். இந்த அறிவிப்பால் அவர்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே, 112 கிலோவாட் வரை இந்த கட்டண விலக்கை அமல்படுத்த வேண்டும். நிலைக்கட்டண உயர்வும் திரும்பப் பெறப்பட வேண்டும்,'' என்றார் டேக்ட் தலைவர் ஜேம்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை