பேர்புரோ கண்காட்சி நிறைவு
கொடிசியா வளாகத்தில் நடக்கும் கிரெடாய் கண்காட்சி ஆகஸ்ட் 9 ஆம் தேதியே கடைசி. இதில் 30 அரங்குகளில், பல்வேறு நிறுவனங்கள் ரூ.78 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான அடுக்குமாடி வீடுகளை விறகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் உள் அலங்காரம், மின் அலங்காரம், நவீன வசதிகள் உள்ளன. வளாகத்தில் நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், பொது நிகழ்வு அரங்குகள் உள்ளன. ஸ்டேட் பாங்க், எச்டிஎப்சி ஆகியவை அரங்கிலேயே கடன் ஒப்புதல் தருகின்றன. கண்காட்சியில் வீடு முன்பதிவு செய்வோருக்கு நிறுவனங்கள் சலுகை தருகின்றன. முதியோருக்கென தனி வீடுகளும் கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையிலும் வீடு வாங்கலாம். கண்காட்சி காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.