உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொத்து அவரை அறுவடை விவசாயிகள் தீவிரம்

கொத்து அவரை அறுவடை விவசாயிகள் தீவிரம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பகுதியில் கொத்து அவரை சாகுபடி துவங்கியுள்ளது.கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பகுதியில் பருத்தி, மிளகாய், கொத்து அவரை போன்ற பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், கொத்து அவரை அறுவடையை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.விவசாயி நடராஜ் கூறியதாவது:25 சென்ட் பரப்பளவில் கொத்து அவரை நடவு செய்துள்ளோம். சாகுபடி செய்து இரண்டு மாதங்களான நிலையில், நடவு, களை எடுத்தல், பராமரிப்பு மற்றும் உரம் என, மூன்றாயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.தற்போது, கொத்து அவரை பறிப்பு நேரத்தில் மட்டும், ஆள்கள் வைத்து பறிக்கிறோம். ஒவ்வொரு பகுதியாக ஒரு நாள் இடைவெளியில் பரிக்கிறோம். நாள் ஒன்றுக்கு, 20 கிலோ வரை அவரை பறிக்கப்படுகிறது.மழை இல்லாததால், பயிர் இரண்டு அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. மழை பெய்திருந்தால், விளைச்சல் அதிகமாகவும், பயிரின் அளவு ஆறு அடி வரை உயரமாக இருக்கும். வரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில், விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை