மேலும் செய்திகள்
அன்னுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
20-Oct-2024
அரசு நம்பிக்கை துரோகம் விவசாயிகள் குற்றச்சாட்டு
27-Oct-2024
பொள்ளாச்சி; ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், பொள்ளாச்சி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், பாமாயில் எண்ணெயை தடை செய்து, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, 100 ரேஷன் கடைகளில், 100 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கிறது.அதில், 38வது நாளாக, கருப்பம்பாளையம் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். விவசாயிகள் பங்கேற்றனர்.மாநில தலைவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பாமாயிலை நிறுத்தி விட்டு, உள்நாட்டில் விளையும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.மது அருந்துவது, நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும், உயிருக்கும் கேடு என எழுதி விஷத்தை அரசு விற்பனை செய்யும் போது, இயற்கையாக கிடைக்கக்கூடிய கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, 100 நாட்கள், 100 ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.கடந்தாண்டு இதே கோரிக்கை வலியுறுத்தி, 30 நாட்கள் சிதறு தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின், வேளாண்துறை அமைச்சர், நான்கு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யப்படும் என அறிவித்தார்.அதே போன்று, மத்திய அரசும், ஆறு மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்வதை பரிசீலிப்பதாக தெரிவித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே, மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.100 நாட்கள் முடிவதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து, ஆயிரம் சிதறு தேங்காய்கள் உடைத்தும், பாமாயிலை எரித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
20-Oct-2024
27-Oct-2024